கொள்கைப் பிரேரணைகள் 2003 – விதப்புரைகளின் பொழிப்பு

கல்விக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பொறுப்பின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு பொதுக் கல்வி பற்றிய இந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டன. இக்கொள்கை முன்மொழிவுகள் இந்நாட்டுக் கல்வியின் நிகழ்கால நிலைமை மற்றும் தற்போது அமுலாக்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் பற்றி பதினெட்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் வழிமுறைகளிலிருந்தும் பொதுவான கல்வி முறைமையின் நிகழ்கால தன்மை மீது தீர்வுக் கட்டமான முறையில் தாக்கமேற்படுத்திய சூழமைவு சார்ந்த காரணிகள் பற்றிய மீளாய்வுகளிலிருந்தும் மக்களின் கருத்துக்களை கண்டறிதலிலிருந்தும் ஆணைக்குழுவானது நிலையான குழுக்கள் மற்றும் உப குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலமாக கருத்துப் பரிமாற்றல்களினூடாக பெற்ற பெறுபேறாகும். இவ்விதமாக நோக்கும் போது இந்த முன்மொழிவுகள் பெருமளவு எண்ணிக்கை கொண்ட அர்ப்பணிப்பு மிக்க ஆட்களினதும் குழுக்களினதும் நோக்குகள் மற்றும் அனுபவங்களை உள்ளார்ந்த ரீதியாகக் கொண்ட ஒரு தொகுப்பு எனக் கருதலாம். ஆணைக்குழுவானது தேசியக் கொள்கைகளுக்கு அமைவாக தற்போது வெற்றிகரமாக அமுலாக்கப்பட்டு வருகின்ற கொள்கை ரீதியான சீர்திருத்தங்களை மேலும் பலப்படுத்தி அதன் இடையறாத தன்மையை பேணி வருவதற்கும் புதிதாக மேலோங்குகின்ற தேவைகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கக்கூடிய வகையில் மாற்றங்களை ஊக்கியாக வழங்கவும் முயற்சி செய்துள்ளது. மேலதிக விபரங்களுக்காக >>