பிரதான குறிக்கோள்கள்

கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்ளை மீளாய்வு செய்தல், விரிவான கல்விக் கொள்கை சம்பந்தமாக சனாதிபதி அவா்களுக்கு விதப்புரையைச் சமர்ப்பிப்பதை உள்ளடக்கியதாக கல்விக் கொள்கையில் தொடர்ச்சி நிலை பெறுவதை உறுதி செய்வதற்காகவும் சமுதாயத்தின் மாறிவரும் தேவைகளைச் சமாளிப்பதற்கு கல்வித் துறையின் இணக்கத்தைக் காட்டும் கருத்துடன் கல்விக் கொள்கையுடன் தொடாபுடைய எல்லா அம்சங்களிலும் சனாதிபதிக்கு விதப்புரை செய்வதற்காகவுமே 1991 இன் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் தேசியக் கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

விரிவான தேசிய கல்விக் கொள்கையில் கீழே காட்டப்பட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கல்வியின் குறிக்கோள்களும் இறுதியான அடைவுகளும், முன்பள்ளிகள், ஆரம்ப, இடைநிலை, மூன்றாம் நிலை, உயர், முறைமையில், முறைசாரர், முதியோர், விசேட, தொழில்சார் மற்றும் மதம்சார் ஆகிய கல்வித் திட்டங்களின் கட்டமைப்பு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல் மற்றும் ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான வழிமுறைகளையும் அளவுகோல்களையும் உள்ளடக்கியதாக கல்வி

நிறுவனங்களின் இடவமைவும் அவற்றின் பரம்பலும் கற்பித்தல் ஊடகம், பாடவிதான பன்வகைப்படுத்தல், பாட நூல்களும் கற்பித்தல் சாதனங்களும், சமய அறிவு அனுட்டானம் மற்றும் பயிற்சி பெறும் இடங்கள், கணிப்பீடு செய்தலும் மதிப்பீடும், பரீட்சை முறை சான்றிதழ்கள், தொழில்வாண்மைப் பத்திரம் மற்றும் கல்விசார் அளிப்புக்களையும் தகைமைகளையும் வழங்குதல். ஆசிரியர்கள், உபகரணங்கள், கல்விப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளிட்ட கல்விச் சேவைகள் பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ளல், நிறுவுதல், அவர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் தொழில்சார் விருத்தி சமுதாய பங்கேற்பினை பயன்படுத்துதலையும் உள்ளிட்ட கல்விக்கான வளங்கள் மற்றும் மதிய போசனம், சுகாதாரமும் பற்சிகிச்சைச் சேவைகளும், உடற் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையை உள்ளடக்கியதாக கற்றலுக்கான உதவிச் சேவைகள்.

Payer Ed Overview